வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் நிலைமைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் வன்னிப்படைத்தலமையகத்துக்கான விஜய மொன்றை தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத்தளபதி, வன்னிக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மற்றும் படைத்தளபதிகளுடன் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
மேலும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில், படையினரின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா விசாரித்து அறித்து கொண்டார்.
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் படையினரின் விடுமுறைக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் கலந்துரையாடியுள்ளதுடன், கொழும்பு திரும்புவதற்கு முன், சிரேஷ்ட படை அதிகாரிகளுக்கான உரிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.