கம்பஹா பொலிஸ் பிரிவின் சில இடங்களில் பொலிஸார் புதன்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று வியாழக்கிழமை காலை வரையும் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டனர்.
இதன்போது மூன்று தமிழ் இளைஞர்களும் இரு சிங்கள இளைஞர்களும் தமது வதிவிடப் பதிவை உறுதிப்படுத்தாத காரணத்தால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில்வாய்ப்புக்காக கம்பஹாவுக்கு வந்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 28 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனச் சாரதிகள் 284 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வலிவேரியா பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.