|
புத்தளம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து 2 கைக்குண்டுகள், 110 ரவைகள் என்பனவற்றை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை வண்ணாத்துவில்லு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, புத்தளம் நோர்த் வீதியில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். |