அறுபது ரூபாவுக்கு அரிசி கிடைக்குமென கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி வெளியிட்ட சிங்களப் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்தினுள் நேற்று வியாழக்கிழமை காலை நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கொழும்பு- 2இல் உள்ள மேற்படி பத்திரிகை அலுவலகத்தினுள் நேற்றுக் காலை 10.30 மணியளவில் குடும்பப்பெண்கள் பலர் நுழைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பத்திரிகை 60 ரூபாவுக்கு அரிசியை பெற முடியுமெனத் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.இதனை நம்பி தாங்கள் எல்லா இடங்களிலும் தேடித் திரிந்த போதும் 60 ரூபாவுக்கு அரிசியை பெற முடியவில்லையென்றும் 60 ரூபாவுக்கு எங்கு அரிசியை பெற முடியுமெனக் கூறுமாறு கோரி இந்தப் பெண்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவர்களைக் கட்டுப்படுத்தி அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்த பத்திரிகை அலுவலகப் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் பாடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.