மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் தான் பெற்றெடுத்த ஒரு நாள் பெண் சிசுவை பாழ் கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இளம் தாயொருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்துள்ளனர்.
சவுக்கடி- தளவாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் தாயே கைது செய்யப்பட்டவராவார்.
இந்தப் பெண்ணின் கணவர் மூன்று வருடகாலமாக வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் வீட்டில் இல்லாத காலப் பகுதியிலேயே இப்பெண் கருவுற்று குழந்தை பிரசவித்திருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அயலவர்கள் கொடுத்த புகாரையடுத்தே மேற்படி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.தட்சணாமூர்த்தி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.