Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
[11 - April - 2008] [Font Size - A - A - A]
உலகின் பல வல்லரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டும் பெரும் ஆயுதங்களை பெற்றுக்குவித்தும் போர் ஒத்திகைகள் மற்றும் புதிய நுட்பங்கள் என்றெல்லாம் தயார்படுத்தியும் களமிறங்கிய இராணுவம் ஓராண்டு காலமாக மன்னாரில் திணறிக்கொண்டிருக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் கலந்துகொண்டு சமகால நிலைமைகள் தொடர்பாகப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

விடுதலைப் போராட்டம் பலம் பொருந்திய நிலையில் இன்று வந்திருக்கின்றது. எமது போராளிகள் பெருந்தொகையான படைகளுடன் மோதிக்கொண்டிருக்கின்றனர். போர் என்றால் மிகச் சாதாரணமானதல்ல. தனியே வெற்றிகள் தான் போரல்ல. அந்த வெற்றிகளுக்கான ஒழுங்குபடுத்தல்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஒழுங்குபடுத்தல்கள் சரியான முறையில் நிறைவடைந்தால் வெற்றிச் செய்திகள் எமது காதுகளை நிறைக்கும்.

மன்னார் முதல் மணலாறு வரைக்கும் கிளாலியில் இருந்து நாகர்கோவில் வரைக்கும் 350 கிலோ மீற்றருக்கும் அதிகமான நீளத்தைக்கொண்ட எல்லைகளில் படைகளை எதிர்கொண்டு போரிட்டு வருகின்றோம். இந்த எல்லைக்குள் வலிந்து இழுக்கப்பட்ட படையினருடன் நாளாந்தம் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சண்டைகளில் படைகள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. நாமும் சில இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். போர் என்றால் இழப்புகளைச் சந்தித்தேதான் ஆகவேண்டும். தொடர்ச்சியான பெரும் போருக்குள் நாம் நிற்கின்றோம்.

எதிரிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதுதான் போரல்ல. மூர்க்கமாக முன்நகரும் படையினரை எல்லைகளில் அசையாமல் தடுத்து வைத்திருக்கின்றனரே உங்கள் பிள்ளைகள் அது மிகப்பெரும் பணி. இலங்கை அரசின் 75 வீதமான படையினர் இன்று இந்த எல்லைப் பிரதேசங்களிற்குள் முடங்கியிருக்கின்றனர். இந்த 75,000 படைகளையும் தடுத்து நிறுத்தி வைத்து அவர்களுக்கு நாளாந்தம் பெரும் இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர் போராளிகள்.

கடந்த மாதம் மட்டும் இந்த எல்லைகளில் 143 படைகள் கொல்லப்பட்டும் 840 படையினர் காயமடைந்துமிருக்கின்றனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டிருக்கிறது. ஒரு மாதத்தில் 1,000 படையினர் கள முனைகளில் உயிரிழந்தும் காயமடைந்தும் அகற்றப்படுகின்றனர். நாளுக்கு நாள் படைகளின் இழப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு பெருந்தொகையான படையினரை எல்லைகளில் முடக்கி வைத்திருப்பது என்பது மிகவும் சாதாரணமான விடயமல்ல. இந்தப் படை முடக்கம் என்பது எமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மிகவும் முக்கியமானது. மன்னாரைப் பிடித்து விடுகின்றோம் என்று தமது விரல்களை மடித்து நாட்களை எண்ணியது இலங்கைப் படைத்துறை. ஒரு வாரம் போதும் என்றனர். பின்னர் 100 நாட்களில் பிடிக்கின்றோம் என்று கற்பனை உலகில் மிதந்தனர். இன்று ஒருவருடம் கடந்துபோய்விட்டது. இன்றும் மன்னாரில் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com