ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியா பயணமானார்.
நேற்று வியாழக்கிழமை நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட ரவூப் ஹக்கீம் மக்கா, மதீனா நகரங்களில் தங்கிநின்று புனித உம்றா கடமையை நிறைவேற்றுவார்.
உம்றா கடமையை நிறைவேற்றிய பின்னர் நாடு திரும்பும் ஹக்கீம் கிழக்கு மாகாணத் தேர்தல் பிரசாரத்தில் முழு அளவில் ஈடுபடுவாரென அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் ரவூப் ஹக்கீம் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.