மன்னாரில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஆறு படையினர் படுகாயமடைந்துள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிறிகுளம் பகுதியில் மிதிவெடிகளில் சிக்கி மூன்று படையினர் படுகாயமடைந்த அதேநேரம், அங்கு இடம்பெற்ற மோதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாயொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், அடம்பன், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.