Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
[11 - April - 2008] [Font Size - A - A - A]
* கடுமையாக எச்சரிக்கிறது ஐ.நா.

உள்நாட்டில் நெல் அறுவடையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மோதல்கள் அதிகரித்துச் செல்வதும் பல்லாயிரக்கணக்கான இலங்கையருக்கு போதியளவு உணவு கிடைக்காத நிலையை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஐ.நா.உணவுத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் 2 கோடி சனத்தொகையில் அரைவாசித்தொகையினர் தினமும் ஆகக் குறைந்தது 2030 கலோரியையே உள்ளெடுப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிய வருகிறது.

சராசரியாக வறியவர் ஒருவர் 1,696 கலோரியை தினமும் உட்கொள்கிறார். அதேசமயம் சாதாரண வாழ்க்கைத்தரமுள்ளவர் 2194 கலோரியை உட்கொள்கின்றார் என்று தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

போஷாக்கின்மை கிராமப் பகுதிகளிலும் வட,கிழக்கிலும் அதிகளவில் காணப்படுவதாக ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தீவின் மத்திய பகுதியிலுள்ள வறள் வலயப்பகுதியிலும் போஷாக்கின்மை அதிக அளவில் காணப்படுவதாக உலக உணவுத்திட்டத்தின் இலங்கையிலுள்ள பிரதித்தலைவர் ஜேன் வைவெஸ் லெக்குய்ம் கூறியுள்ளார்.

கல்வி அறிவின்மை, சுகாதார வசதிக்குறைவு என்பனவும் போசாக்கின்மை மிகத் தாழ்ந்த மட்டத்திலிருப்பதற்கான காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின், சிறுவர் நிதியத்தின் தகவல் தொடர்பு அதிகாரியான கோர்டன் வீஸ் போஷாக்கின்மை தொடர்பாக தெரிவிக்கையில், விவசாயச் செய்கை நடைபெறும் கிராமப்புற மக்கள் மத்தியில் வறுமையும், உடல் வலுவுக்கான சக்திதேவையும் பொதுவான பிரச்சினைகளாக இருந்துவருவது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக விவசாயப் பகுதிகளில் வாழும் மக்கள் கூடுதலான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக உள்ள அதேவேளை, கூடுதலான கலோரி உணவின் தேவையும் அவர்களுக்கு உள்ளது. இப்பகுதி மக்கள் வறியவர்களாக இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லீ குய்ம் இலங்கையில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக தகவல் தருகையில், நாட்டில் தலா ஒருநபருக்கான வருடாந்த வருமானம், 1599 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நிறை குறைந்த சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உண்மையில், இலங்கையின் சிசுமரணங்களின் அதே வீதாசாரத்தினை கொண்டுள்ள இன்னொரு நாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் போஷாக்கற்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது எனவும் லீ குய்ம் தெரிவித்தார்.

நாட்டில் நிறைகுறைவாக உள்ள 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கை 14 வீதமாக உள்ள நிலையில், 5 வயதுக்கும் மேற்பட்ட நிறைகுறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 29 வீதமாக காணப்படுகின்றமை அதிர்ச்சியான ஒரு தகவலாகும்.

மேலும், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை மற்றும் போஷாக்கின்மை பற்றிய பிரச்சினைகள் கவனத்திற்குரிய விடயங்களாக இருப்பதுடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், மற்றும் வவுனியாவில் சில பகுதிகளிலும் இதன் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

மேலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள், அவசர மனிதாபிமான உதவி கோரி நிற்கும் இடங்களாகவும் இனங்காணப்பட்டுள்ளன. தேசிய மட்டத்தில் போஷாக்கின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதற்கு, பண வீக்கம் 17.5 வீதமாக உயர்ந்துள்ள நிலை காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் பிரதான காரணமாகும்.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் பருவ காலம் தவறிய கடும் மழையும், இதனால் பெரும்போக அறுவடை பாதிக்கப்பட்டு, அரிசியின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும், உலகரீதியாக உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டின் காரணமாக அவற்றுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பும் இந்த மோசமான நிலைக்கான பிரதான காரணமெனவும் உலக உணவுத்திட்ட அமைப்பின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com