யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று வியாழக் கிழமை காலை படைவீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நல்லூர் கோவில் வீதியில் காவலில் ஈடுபட்டிருந்த போது நேற்றுக் காலை 8.15 மணியளவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த படைவீரரை உடனடியாகப் படையினர் தமது வாகனத்தில் ஏற்றி பலாலிக்குக் கொண்டு சென்றனர். பலாலிக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.