Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
`ருவென்ரி -20' போட்டியில் இந்திய அணி உலக அணியிடம் தோல்வியடைந்தது
[11 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய அணிக்கும் உலக அணிக்குமிடையிலான `ருவென்ரி-20' போட்டியில் உலக அணி வெற்றிபெற்றுள்ளது.

கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) சார்பில் `உலக 20' ஓவர் போட்டித் தொடர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்திய பாகிஸ்தான் அணி மற்றும் உலக அணி என்று 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை 3.24 கோடி ரூபாவாகும். சாம்பியன் ஆகும் அணிக்கு 1.25 கோடி ரூபா பரிசுத்தொகையாகக் கிடைக்கும்.

நேற்று முன்தினம் நடந்த தொடக்கப் போட்டியில் சதீஸை கப்டனாக கொண்ட இந்திய அணியும், கெய்ன்ஸை கப்டனாகக் கொண்ட உலக அணியும் சந்தித்தன. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி.பி.சிங் 63 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) எடுத்தார்.

அடுத்து அதிரடியாக ஆடிய உலக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வின்சென்ட் 43 ஓட்டங்களும், மார்ட்டின் 67 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது), அத்தபத்து 25 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது) எடுத்து தங்கள் அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள். நேற்று 2 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் உலக அணிகள் மோதின.

Email this page Your Opinion Print this page
திபெத்தியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஒலிம்பிக் தீப ஓட்டம் கைவிடப்படமாட்டாது
கான்பூர் டெஸ்ட் போட்டியை சீர்குலைக்க சதி? இந்திய, தென் ஆபிரிக்க அணிக்கு பலத்த பாதுகாப்பு
`ருவென்ரி -20' போட்டியில் இந்திய அணி உலக அணியிடம் தோல்வியடைந்தது
கான்பூர் டெஸ்ட் இன்று தொடங்குகிறது ஆடுகளம் குறித்து கப்டன் ஸ்மித் அதிருப்தி
அமெரிக்க வீராங்கனை வீனஸ் டெனிஸுக்கு தற்காலிக ஓய்வு
மேற்கிந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணியில் ஏழு புதுமுக வீரர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com