பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை
மணிலா: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியாவுக்கு எதிராக 2003 ஆம் ஆண்டில் நடந்த இராணுவப் புரட்சியில் பங்கேற்ற 2 இளநிலை இராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 7 அதிகாரிகளுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இராணுவத் தளபதிகள் கம்பாலா , மாஸ்ட்ரோகாம்போ ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. 2003 இல் நடந்த இராணுவப் புரட்சி ஒரே நாளில் அடக்கப்பட்டது.
இராணுவப் புரட்சியை நடத்திய முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.