Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு *4 பொதுமக்கள் காயம்
[12 - April - 2008] [Font Size - A - A - A]
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு

?4 பொதுமக்கள் காயம்

மிகிந்தலை தொரமடலாவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொரமடலாவ வீதிச் சோதனை நிலைய இராணுவக் காவலரணிலிருந்து இராணுவச் சிப்பாய்யொருவர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த நால்வரும் படுகாயமடைந்தனர்.

காவலரணிலிருந்த மேற்படி இராணுவச் சிப்பாயுடன் இவர்கள் சச்சரவில் ஈடுபட்ட நிலையிலேயே சின மடைந்த அந்தச் சிப்பாய் இந்த நால்வர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த நால்வரும் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருவர் அவசர சத்திர சிகிச்சைக்குட் படுத்தப்பட்டனர். ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நால்வரும் தொரமடலாவ பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கல்
போலி நிதி ஸ்தாபனம் நடாத்திய கும்பல் தம்புள்ள பிரதேசத்தில் தலைமறைவு
அமெரிக்கா செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த கல்வியங்காடு குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது
கரடிபூவல் கிராமத்தில் 2 இளைஞர் ஆயுத பாணிகளால் கடத்தப்பட்டனர்
ஜே.வி.பி.உறுப்பினரின் கடத்தப்பட்ட வாகனம் மீட்பு
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்தக் கோரி மலையகத்திலும் கையொப்பம் திரட்டும் பணிகள் முன்னெடுப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
இலங்கையில் பணிபுரியும் ஐ.நா. ஊழியரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட குழு ஆராய்வு
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு *4 பொதுமக்கள் காயம்
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
விமானப்படையின் 5 ஆவது தளபதி ஹரி குணதிலக்க காலமானார்
அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த ஜே.வி.பி. பெண் எம்.பி. குத்துக்கரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com