Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
[12 - April - 2008] [Font Size - A - A - A]
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை

யாழ்நகர் நிருபர்

யாழ்.குடாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை கைதடியிலும் நேற்று நண்பகல் நீர்வேலியிலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி கைதடி மேற்கில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சலவை நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கைதடி மேற்கிலுள்ள இவரது சலவை நிலையத்திற்கு நேற்றுக் காலை 10 மணியளவில்

மோட்டார் சைக்கிளொன்றில் சென்றவர்களே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான பண்டாரி பரமநாதன் (34 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

இதேநேரம், நேற்று நண்பகல் நீர்வேலி பகுதியில் இளம் தச்சுத் தொழிலாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளொன்றில் வந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த குணசிங்கம் சுரேஷ்குமார் (27 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

இவ்விருவரது சடலங்களும் பின்னர் யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.

Email this page Your Opinion Print this page
தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கல்
போலி நிதி ஸ்தாபனம் நடாத்திய கும்பல் தம்புள்ள பிரதேசத்தில் தலைமறைவு
அமெரிக்கா செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த கல்வியங்காடு குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது
கரடிபூவல் கிராமத்தில் 2 இளைஞர் ஆயுத பாணிகளால் கடத்தப்பட்டனர்
ஜே.வி.பி.உறுப்பினரின் கடத்தப்பட்ட வாகனம் மீட்பு
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்தக் கோரி மலையகத்திலும் கையொப்பம் திரட்டும் பணிகள் முன்னெடுப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
இலங்கையில் பணிபுரியும் ஐ.நா. ஊழியரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட குழு ஆராய்வு
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு *4 பொதுமக்கள் காயம்
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
விமானப்படையின் 5 ஆவது தளபதி ஹரி குணதிலக்க காலமானார்
அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த ஜே.வி.பி. பெண் எம்.பி. குத்துக்கரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com