தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக புலமைப் பரிசில்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்தவராகவோ அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்தவராகவோ அல்லது கணிதபாடத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவராக இருக்கவேண்டும், என்பதுடன், 25 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை இல.36, காலி வீதி கொழும்பு 03 இலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசித் திகதி மே பத்தாம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.