Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
[12 - April - 2008] [Font Size - A - A - A]
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்

ஹெய்ட்டி தலைநகர் போர்ட் ஒவ் பிறின்சில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த மூன்று இலங்கைப் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹெய்ட்டியில் தற்போது நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப் படையில் 600 க்கும் மேற்பட்ட இலங்கை படையினரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், புதன்கிழமை இரவு தலை நகரில் மாட்டிஸ் சான்ற் பகுதியில் ரோந்து சென்ற ஐ.நா படையினர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் இலங்கைப் படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதனை ஐ.நா.வும் உறுதிப்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த மூன்று இலங்கைப் படையினரும் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஐ.நா. அமைதிப் படையென்பதால் இவர்கள் பதில் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.

உள்நாட்டுப் போரில் சிக்குண்ட ஹெய்ட்டியில் அண்மைக்காலமாக விலைவாசிகள் அதிகரித்து வருவதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்த மூன்று இலங்கைப் படையினரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கல்
போலி நிதி ஸ்தாபனம் நடாத்திய கும்பல் தம்புள்ள பிரதேசத்தில் தலைமறைவு
அமெரிக்கா செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த கல்வியங்காடு குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது
கரடிபூவல் கிராமத்தில் 2 இளைஞர் ஆயுத பாணிகளால் கடத்தப்பட்டனர்
ஜே.வி.பி.உறுப்பினரின் கடத்தப்பட்ட வாகனம் மீட்பு
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்தக் கோரி மலையகத்திலும் கையொப்பம் திரட்டும் பணிகள் முன்னெடுப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
இலங்கையில் பணிபுரியும் ஐ.நா. ஊழியரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட குழு ஆராய்வு
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு *4 பொதுமக்கள் காயம்
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
விமானப்படையின் 5 ஆவது தளபதி ஹரி குணதிலக்க காலமானார்
அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த ஜே.வி.பி. பெண் எம்.பி. குத்துக்கரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com