ஜே.வி.பி.உறுப்பினரின் கடத்தப்பட்ட வாகனம் மீட்பு
முந்தல் நிருபர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட ஜே.வி.பி.உறுப்பினர் ஒருவரின் வாகனம் சிலாபம் தெமட்டபிட்டி பகுதியிலுள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ஸ்ரீஹேரத்தின் வாகனம் காணாமல்போயிருந்தது. இந்த வாகனமே கடந்த வியாழக்கிழமை இரவு சிலாபம் தெமட்டபிட்டி பகுதியிலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.ஜி.குணரட்ன தெரிவித்தார்.