ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம்
பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியனவும் பலகோடி ரூபாய்க்கு ஏலம் போனது.