தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 28, 29 இல்
சாய்ந்தமருது நிருபர்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதியை வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினமாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து 22,042 பேர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள நிலையில் இதன் வாக்களிப்பு இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, மேற்படி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் மே மாதம் 7 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. மேற்படி தேர்தல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு வசதியாக இம் மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.