கதிர்காமத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இரத்தினபுரி நிருபர்
புத்தாண்டுக்கு கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்கள், தமது ஆளடையாளத்தை நிரூபிக்கக்கூடிய வகையில் உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தமது பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையும் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலைச் சம்பவம், மற்றும் புத்தாண்டு தினம் என்பவற்றை முன்னிட்டு கதிர்காமப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.