Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
"மனிதநேயமிக்கதோர் மக்கள் தலைவராக விளங்கியவர்'
[13 - April - 2008] [Font Size - A - A - A]
"மனிதநேயமிக்கதோர் மக்கள் தலைவராக விளங்கியவர்'

பதுளை நிருபர்

மனித நேயமிக்கதோர் மக்கள் தலைவராக இருந்துவந்த நெடுஞ்சாலை, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பு எவ்வகையிலும் ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இவ் இழப்பானது சமூகமொன்றிற்குமட்டுமல்லாது, இந்நாட்டிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று ஊவா மாகாணசபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ஒவ்வொரு சிரேஷ்ட அரசியல் வாதியும் படுகொலை செய்யப்படும் போது, நாட்டின் இனப்பிரச்சினை உடன்தீர்க்கப்படல் வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதாகத் தெரியவில்லை. படுகொலைகள் தொடர்ந்து செல்கின்றது. இதன் மூலம் நாட்டின் பெறுமதிமிக்க உயர் அரசியல் தலைவர்களை, நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.

இனியும் இதுபோன்று படுகொலைகள் தொடர களம் அமைக்கப்பட்டுவிடக்கூடாது. உடன் இக்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்டவர்கள், உடனடியாக முன்வந்து இனப்பிரச்சினை தீர்விற்கான, ஆக்கபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
"மனிதநேயமிக்கதோர் மக்கள் தலைவராக விளங்கியவர்'
அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்?
சர்வமதத் தலைவர்கள் மாநாட்டில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்
வவுனியா தாலிக்குளம் வீடொன்றில் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளை
எந்தவொரு நிகழ்வையும் அச்சம், பீதிக்கு மத்தியிலேயே நடத்த வேண்டியுள்ளது
யுத்த அரக்கனின் பிடிக்குள் நாடு சிக்கி மனித உயிர்களும் வளங்களும் அழிவு
கதிர்காமத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 28, 29 இல்
நிவாரண உதவிகளில் தோட்ட பகுதி தொழிலாளர் மீது பெரும் பாரபட்சம்
இராணுவத்தின் மனநிலையை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் அழைப்பு
பிறக்கும் புத்தாண்டு ஐக்கியம் சுபிட்சத்தை தோற்றுவிக்கட்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com