புத்தாண்டை முன்னிட்டு நண்பர் தனது அலுமாரியில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் ஆடைகளை சீர் செய்யத் தொடங்கினார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க, பைல்களிலிருந்து தேவையற்ற பத்திரங்களையும் மற்றும் அலுமாரியிலிருந்த மிகப்பழைய ஆடைகளையும் அகற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தார். ஆமாம், காணாமற்போய்விட்டதாக இதுவரை அவர் கருதிய ஒரு காணி உறுதியும் இன்னொரு முக்கிய ஆவணமும் பழைய காகிதக் கட்டுக்குள் கிடப்பதைக் கண்டார்.
எனவே நண்பருக்கு புத்தாண்டு, இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்தது.
இப்படித்தான் நம்மில் பலரும் ஞாபக மறதியாகச் சில முக்கிய ஆவணங்களை எங்காவது சொருகி வைத்துவிட்டு, பின் அவை வைக்கப்பட வேண்டிய இடத்தில் தேடுதல் நடத்துவதுண்டு.
நீண்ட விடுமுறை காலம். இதனை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகிறது.
நண்பருக்குக் கிடைத்ததும் ஒரு கைவிசேஷம்தான்.