* பேராயர்கள் கோரிக்கை
சிம்பாப்வேயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி முகாபேயை நிர்ப்பந்திக்க வேண்டும் என ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு பேராயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ஆபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா, புருண்டி, கொங்கோ, கானா, தென்னாபிரிக்கா, கென்யா, தன்சானியா, உகண்டா, ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராயர்கள் கலந்து கொண்ட மாநாடு தென்னாபிரிக்காவின் பிரிடோரியா நகரில் நடந்தது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில்; சிம்பாப்வேயில் தேர்தல் முடிந்து இரு வாரங்கள் ஆன பிறகும் முடிவுகள் அறிவிக்கப்படாதது குறித்து பேராயர்கள் கவலை தெரிவித்தனர்.