|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் மாணவர்களின் அத்துமீறல் காரணமாக ஒரு வார காலமாக விரிவுரையாளர்கள் கல்விச் செயற்பாடுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் நடைபெற்றுவந்தபோது விரிவுரையாளரின் அனுமதியின்றி மாணவர்கள் மாணவிகளை வெளியேற்றியமைக்கு கண்டனம் தெரிவித்தே விரிவுரையாளர்கள் கல்விச் செயல்பாடுகளைப் பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியின் உயர்பீடமாகக் கருதப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருப்பதால் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மாணவர்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு விரிவுரைகள் நடைபெறுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி ஆவன செய்ய தாமதிப்பதன் காரணம் புரியவில்லையென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |