Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
[15 - April - 2008] [Font Size - A - A - A]
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸார் பொதுமக்கள் நல்லுறவைப் பேணுமுகமாக வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்கள் தனித்தனியாக மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவையை நடாத்தத் திட்டமிட்டுள்ளன. இந் நடமாடும் சேவைகள் நாளை பருத்தித்துறை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அல்வாய் ஷ்ரீலங்கா வித்தியாலயத்தில் நடைபெறுமென பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி ஜே.எச்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை கரவெட்டி கலிகைச்சந்தி கந்தன் ஆலயச் சுற்றாடலில் நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.ஜே.ஹேரத் தலைமையின் அதே தினத்தில் நடைபெறும். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை வல்வெட்டித்துறை நகரசபை கட்டிடத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி டபிள்யு.சுமித்திஸங்க தலைமையில் நடைபெறும்.

இந்த நடமாடும் பொலிஸ் சேவையின்போது பிரதேச செயலர்கள், இறப்பு பிறப்பு பதிவாளர்கள், காணி அதிகாரிகள் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் , உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், கிராமசேவை அதிகாரிகள், வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என வடமராட்சிப் பிரதேச பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி ஜே.எச்.கே. லியனகே தெரிவித்தார்.

நடமாடும் பொலிஸ் சேவையில் பிரதே சத்தில் களவு, வழிப்பறிக்கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், திருமணமாகியும் விவாகப்பதிவு செய்யாதவர்களை பதிவு செய்தல், போரினால் பிறப்பை பதிவுசெய்யாத சிறுவர்களின் பதிவை மேற்கொள்ளல், பாடசாலைகளை விட்டு இடைவிலகிய சிறார்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்தல், பொதுப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாணுதல், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கட்டாயம் பெறவைப்பது போன்ற விடயங்கள் இந்நடமாடும் சேவையில் இடம் பெறவுள்ளன.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com