பிரிட்டனில் முதன்முறையாக அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய பிரிட்டன் "தமிழர் மெய்வல்லுநர் போட்டி-2008" லண்டன் வட,கிழக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லீவலி மெய்வல்லுநர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகியது. ஐந்து இல்லங்களைச் சேர்ந்த ஆண்- பெண் இரு பாலாருக்குமான அணி நடையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து திருமதி பத்மினி குணசீலனின் மாணவிகளின் தமிழர் பண்பாட்டினை வெளிப்படுத்திய கோலாட்ட நடனம் நடைபெற்றது.
தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை எட்மன்ரன் உதவி நகரபிதா லீ சேம்பிலினும், பிரித்தானிய தமிழர் விளையாட்டுச் சபையின் கொடியினை அதன் தலைவர் அன்சல்மாரும், ஐந்து இல்லங்களுக்கான கொடிகளை இல்லங்களின் முகாமையாளர்களும் ஏற்றிவைத்தனர்.
நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உள்ளடக்கிய தடகள விளையாட்டுக்கள் பிரமாண்டமான உள்ளக- வெளியக விளையாட்டுத் திடலில் இடம்பெற்றன.