மயக்கமுறும் உணவு மற்றும் பானங்களைக் கொடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவரை அப்பகுதி பொலிஸார் கைது செய்து நீர்கொழும்பு நீதிவான் முன் ஆஜர் செய்தபோது சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்படி விமான நிலையத்துக்கு வந்த தம்பதியரை மூவர் சந்தித்து மயக்கமுறும் பானத்தைக் கொடுத்து அவர்களிடம் ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தமது நிலைமையை உணர்ந்ததையடுத்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, பொலிஸார் ஒரு பெண்ணையும் ஆணையும் அலரிவத்தை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவர்களை நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்செய்தபோதே சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான கொள்ளைகள் விமான நிலையத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட பெண் வாழைச்சேனையையும் மற்றவர் மாளிகாவத்தையும் சேர்ந்தவர்களாவர்.