இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அடையாள அட்டையை வெளியிடுவதற்காக பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ள நிலையில், இப் பத்திரம் அடுத்த மாதம் 21 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக் கேள்விப்பத்திரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு தகுதியான ஆய்வுப் பத்திரம் தெரிவிசெய்யப்படுமென மேற்படி திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ இந்த அடையாள அட்டையை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இதற்கு 7 மாத காலப்பகுதி போதுமானதாகுமெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்படி அடையாள அட்டையில் மூன்று மொழிகளிலும் சகல விபரங்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் இதன் விபரங்கள் கணினி மயப்படுத்தபடுவதனால் தேவையான போது இவ்விபரங்கள் பாதுகாப்பு மற்றும் வங்கித்துறைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.