வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, பொதுமகன் ஒருவரை மோதி உயிரிழக்கச் செய்ததாக இராணுவ கவச வாகனச் சாரதியொருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாண்டிக்குளம் பகுதியில் `ஏ-9' வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கவச வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
பத்தினியார் மகிழங்குளத்தைச் சேர்ந்த காளிமுத்து இலட்சுமணன் (44 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான மரண விசாரணை நேற்றுக் காலை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றபோதே, கவச வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.