Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* ஹசனலி தெரிவிப்பு

"முஸ்லிம்களுக்குப் பலமட்டங்களில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் முகவரியைத் தேடிக் கொடுத்துள்ள எழுச்சியை முறியடிப்பதற்கு பேரினவாதிகள் எம் சமூகத்தினர் சிலரைப் பாவித்து மேற்கொள்ளும் ஆபத்தான சூழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் வியூகமே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் குதித்துள்ளதாகு"மென ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரீ.ஹஸனலி கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் (யானைச் சின்னத்தில்) போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று நிந்தவூர் கே.எம்.ஏ.காதர் ஞாபகார்த்த சுகாதார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஹஸனலி தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது;

"எமது மண்ணையும் முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளத்தையும் உரிமைகளையும் காப்பாற்றுவதற்காகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பல வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றோம்.

பல கழுத்தறுப்புகளையும் காட்டிக்கொடுப்புகளையும் செய்து பேரினவாதிகளின் கையை ஓங்கச் செய்யும் சதி நடவடிக்கைகளை முறியடிக்கும் வண்ணமே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

பல தேர்தல்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டிருக்கின்றோம். அநியாயத்தை முறியடிக்கவும் எமது இறுதி இலக்கை அடைவதற்கான நகர்த்தலாகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணைவு அமைகின்றது.

முஸ்லிம் காங்கிரஸைப் பூண்டோடு அழித்தொழிக்க தொடர்ச்சியான சதிவேலைகளில் முனைப்புக்காட்டி வரும் ஆளும் அரசதரப்பை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளை மதித்தும் அதற்கான ஒத்துழைப்பை நல்கியும் வருகின்றது. ஒற்றையாட்சியை எதிர்த்து சமூகரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டுமென அக்கட்சி வலியுறுத்துகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி சர்வகட்சிக் குழுவிற்கு சமர்ப்பித்த ஆலோசனைகளில், எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறும் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாகப் பங்குபற்ற வேண்டுமெனவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், பத்தாயிரம் அல்லது பதினையாயிரம் சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிழக்கில் முஸ்லிம்களின் தாயகம் இருக்கிறது என்ற கோட்பாட்டை மறுக்கிறேன் எனக்கூறும் புல்லுருவித் தலைவர்களும் நம் சமூகத்திலுள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தேர்தல் பிரசாரக் குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கருத்து வெளியிடுகையில்;

"கிழக்கை மீட்டெடுத்து ஜனநாயக பூமியாக மாற்றியுள்ளோமென்றும் அது சமாதான பூமியென்றும் தம்பட்டமடிக்கும் அரசு மாலை ஆறுமணிக்குப் பின் மக்கள் கூடுவதையும் நாம் பிரசாரக் கருத்தரங்குகள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதையும் தடை செய்கின்றது. ஆனால், அரசு சார்ந்தவர்களுக்கும் அரசின் கைக்கூலிகளுக்கும் இத்தகைய தடைகளில்லாது பல சலுகைகள், கூடியபாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரசாரத்திற்கென விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அரசு உடன் மாற்றவேண்டும். முஸ்லிம் சமூகம் இந்தத் தேர்தலில் கிழக்கை ஆளக்கூடிய சமூகமாக மாறும் நிலைமையை எமது ஒற்றுமை மூலம் தோற்றுவிக்கவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் எமது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்.

கண்டகண்ட இடங்களில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வீதிச்சோதனைச் சாவடிகள் அகற்றப்படவேண்டும்" என்றார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் அனைவரும் முதன்மை வேட்பாளர் எம்.ரி.ஹஸனலிக்கு ஒருவாக்கை அளிப்பதுடன் பின்னர் ஏனைய விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாமென்ற பிரகடனத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com