இறக்குவானை அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த கடும் மழையாலும், மினி சூறாவளியாலும் 6 குடியிருப்புகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
இவற்றில் இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. ஒரு குடியிருப்பில் சுவர் இடிந்து விழுந்ததால் பெண் ஒருவரின் கால் முறிந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூவின மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் 6 முஸ்லிம் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
கொடக்கவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.தாவுஸ் இறக்குவானை இஸ்லாமிய நலன்புரி சங்கம் என்பன தங்குமிட வசதிகள் உட்பட உணவுப் பொருட்கள் ஆகிய வற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் நேற்று வரை இவர்களின் நிலையை அறிய அரச அதிகாரிகள் எவரும் செல்லவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கான அரச உதவிகளை பெற்றுத் தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.