மொனராகலை கலகே பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் - புத்தள வீதியில் உள்ள காவலரண் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இவ்வேளையில் அந்தக் காவலரணில் பொலிஸாரும் நின்றுள்ளனர். இதன் போதே பொலிஸ் அதிகாரி கடும் மின்னல் தாக்குதலால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த மின்னல் தாக்குதலையடுத்து விடுதலைப்புலிகளே பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டதாகக் கருதி படையினர் அப்பகுதியில் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.