தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வருடாந்தம் நடாத்தப்படும், கண் பரிசோதனை முகாம் அண்மையில் கொட்டாஞ்சேனை, கொழும்பு இந்து வித்தியாலயத்தில் நடைபெற்றபோது, கவிஞர் கங்கைவேணியன், தலைவர் டி.ஜி.அற்புதராஜா, பிரதி தலைவர் அ.மனோகரன், ஏ.சந்தனம், செயலாளர் எஸ்.க.தளையரட்டினம், எல்.கோவிந்தராஜா, வி.சிவராம், மன்ற உறுப்பினர் ஜெயராமா மற்றும் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்வதையும் இங்கு காணலாம்.
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளிஅம்பாள் தேவஸ்தானத்தினால் நடத்தப்படும் ஆனந்தபுரி நாகசக்தி அறநெறிப் பாடசாலை மாணவருக்கு சீருடை வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றபோது, ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள், பிரதம அதிதியான வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி, ஆலடி விநாயகராலய ஆதீனகர்த்தா ஷ்ரீலஷ்ரீ மு.சுந்தரலிங்கதேசிகர், காந்திப்பெரியார் பொ.கந்தையா, இலங்கை இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம் ஆகியோர் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்படுவதையும் ஆதீனகர்த்தா ரவிச்சந்திரக்குருக்கள் சீருடை வழங்குவதை ஆரம்பித்து வைப்பதையும் தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமி மாணவருக்குச் சீருடை வழங்குவதையும் நிகழ்வை ஏற்பாடு செய்த அகில இலங்கை `சைவன்' நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் இ.நாகேந்திரராஜாவையும் அறநெறிப் பாடசாலை குழந்தைகளையும் இங்கு காணலாம்.
புதுவருடப் பிறப்பன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தங்காலை, மெதமுல்லானவிலுள்ள வாசஸ்தலத்தில் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாக பொங்கலில் ஈடுபட்டிருப்பதையும் ஜனாதிபதி அருகில் அவதானித்துக்கொண்டு நிற்பதையும் காண்கிறீர்கள்.