இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 18 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் சென்னை `சுப்ப கிங்ஸ்' உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை `சுப்ப கிங்ஸ்' அணி வீரகள் ஸ்ரீபன் பிளமிங், ஜேக்கப் ஓரம் (நியூஸிலாந்து), மைக் ஹஸி (அவுஸ்திரேலியா) ஆகியோர் சென்னையில் முகாமிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் பயிற்சிக்குப் பின் பேட்டியளித்த பிளமிங் கூறுகையில்; `ஐ.பி.எல். போட்டி சர்வதேச அளவில் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தோனி சிறந்த கப்டன். அவரது தலைமையில் சென்னை அணியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
ஓரம், ஹஸி கூறுகையில்; `வெயில் எங்களுக்கு ஒரு பிரச்சினை கிடையாது. ஏனெனில், போட்டிகள் எல்லாம் இரவில் தான் நடக்கின்றன. இந்தத் தொடரில் போட்டி கடுமையாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாது. 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்கு திறமையான வீரர்கள் வேண்டும்'என்றனர்.