கடை வீதியில் ஒரு குடும்பம் அதாவது கணவன், மனைவி, தமது சின்னஞ்சிறிய புதல்வியுடன் நின்றுகொண்டிருந்தனர்.
தந்தை அந்தச் சிறுமியை `வாங்க போங்க' என்றவாறு பன்மையில் அழைத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
சற்று நேரத்தில் கணவன், தனது மனைவியை `வாபோ' என்று ஒருமையில் அழைத்தமை மனதுக்கு வேதனையைக் கொடுத்தது.
சிறுவர்களை பன்மையில் விழித்து அழைப்பது நல்ல பண்பாடு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு அது வழிகாட்டலாகவும் அமையும். ஆனால், அவர்கள் முன்னிலையில் தனது தாயைத் தந்தை ஒருமையில் அழைப்பது என்ன நியாயம்.
மனைவியை `வாடி' என்று கூப்பிட்டால் அவரின் முகம் வாடிவிடுமென்றும் `வாடா' என்று அன்புடன் அழைத்தால் முகம் வாடாமல் இருக்குமென்றும் கூறுவார்கள்.
இதைக் கணவர் அனுசரித்து நடக்கலாமே!.