பாகிஸ்தான் ஜனாதிபதி பதவியிலிருந்து பர்வேஷ் முஷாரப் விலக வேண்டுமென அந்நாட்டு மக்கள் விரும்புவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பாகிஸ்தானிலுள்ள கோல்- அப் என்னும் நிறுவனம் கடந்த சில நாட்களாக மக்களிடம் நேரடியாக ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
முஷாரப் பதவி விலக வேண்டுமென்று 51 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்து முஷாரப்பை பதவி விலக்க வேண்டுமென 22 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, 26 சதவீதமானோர் முஷாரப் பதவியைத் தொடரலாமெனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய அரசு அதன் பதவிக்காலம் முழுவதையும் நிச்சயமாக பூர்த்தி செய்யுமென 40 சதவீதமான மக்களும் ஆட்சி மாறும் வாய்ப்புள்ளதாக அதே சதவீத (40%) மக்களும் தெரிவித்துள்ளனர்.