Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
[16 - April - 2008] [Font Size - A - A - A]
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களில் 30 சதவீதமானவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாது அல்லல்படுவதாகவும் இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக இலங்கையில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகண்டு வருவதுடன், விலைவாசி அதிகரிப்புக் காரணமாக, தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாகவே தோட்ட மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.

சில தோட்டங்களில் சுமார் 50 வீதமானவர்கள் கற்றல் உபகரணங்களை பெற முடியாது அல்லல்படுகின்றனர்.

மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து மலையகத் தலைமைகளும் பாடசாலைகளுக்கு கட்டிட மற்றும் பௌதிக வளங்களை பெற்றுக் கொடுப்பதுடன், ஆசிரியர்களையும் நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இன்றைய பொருளாதார சிக்கல் நிலை காரணமாக தோட்ட மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, அதற்கு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமக்குரிய வருமானத்தில் ஒரு பகுதியில் தோட்ட மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள், பென்சில்கள் போன்ற பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அல்லது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தமக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அல்லது அமைச்சின் நிதியில் அல்லது அரசாங்க நிதி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதனை பெற்றுக் கொடுக்க ஆவன செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் அரிசி மானியம் போன்றில்லாமல் ஆக்கபூர்வமாக இது செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் கட்டாயக் கடமையாக இதனைச் செய்யும் பட்சத்தில் தோட்ட மாணவர்கள் ஓரளவு சுயமாக கல்வி கற்பாளர்களென சுட்டிக் காட்டப்படுகின்றது.

இல்லையேல் தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்களும் தோட்ட வேலைகளுக்குச் செல்வதனை தவிர வேறு வழியில்லையென தோட்டப் பகுதி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com