வவுனியா சந்தையில் கடல் உணவுப்பொருட்கள், கோழி இறைச்சி, மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.
புத்தாண்டிற்குப் பின்னர் சந்தைக்கு பொருட்கள் இன்னமும் வரவில்லை. இதன் காரணமாகவே விலை அதிகரிப்பு காணப்படுகின்றது.
கடல் உணவுப் பொருட்கள் மன்னாரிலிருந்தும் கோழி இறைச்சி அநுராதபுரம் பகுதியிலிருந்தும் மரக்கறி வகைகள் தம்புள்ள சந்தையிலிருந்தும் வவுனியா சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றது.
ஆனால், பப்பாசிப் பழம், கதலி வாழைப்பழங்களின் விலைகள் வழமையை விட குறைந்து காணப்படுகின்றது.
புத்தாண்டிற்கு முன்னர் பெருமளவில் சந்தைக்கு பழவகைகள் வந்ததனால் விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.