கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் திகாமடுல்ல மாவட்டத்தில் இரு முனைப்போட்டியுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, தேசிய காங்கிரஸ் என்பவற்றுடன் இணைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்பவற்றின் கூட்டமைப்பு ஒருபுறமும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டமைப்பு மறுபுறமுமாக பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில் இம்மாகாணசபைத் தேர்தலில் மிக அதிகளவில் இம்மாவட்டத்தில் குதித்துள்ள சுயேச்சைக்குழுக்கள் வழமைபோல் பேரம் பேசுவதிலும், நிபந்தனைகளோடு போட்டியில் இருந்து விலகிக்கொள்வதற்குமான வியூகங்களை விடுப்பதிலும் கவனம் செலுத்திவருகின்றன.
இதேவேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பைப் பலப்படுத்திவருகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது.