மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் மேலுமொரு தமிழ் இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக, அவ் இளைஞனின் தாய், மொனராகலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
குமாரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த கே. ரவிக்குமார் என்ற இளைஞனே கடத்தப்பட்டவராவார்.
புத்தாண்டிற்கு முன்தினமான 12 ஆம் திகதி இனம் தெரியாத இருவர் வீட்டிற்கு வந்து, தமது வாகனம் பழுதடைந்துவிட்டதாகவும் அதனைத் திருத்தித் தருமாறும் கேட்டுள்ளனர்.
வாகன மெக்கானிக்கான தனது மகனும் அவர்களுடன் சென்றதாகவும், இதுவரை தனது மகன் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென்று, கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக்காலை புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து, பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேசின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
மொனராகலையில் இவருடன் சேர்த்து இதுவரை 6 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.