பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு இந்தியாவின் கூர்க்காப் படையின் பாதுகாப்பைப் பெறுவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, விசேட பயிற்சி பெற்ற அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றின் பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையினை அடுத்தே இந்த மாற்று ஏற்பாடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பான கோரிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் சில நாடுகளின் முக்கிய அரசுத் தலைவர்களின் பாதுகாப்புப் பணியில் கூர்க்கா வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க நாடுகளில் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதில் அனுபவம் மிக்க கூர்க்கா வீரர்களை நியமிப்பதன் மூலம் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை குறைக்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.