தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
சர்வதேச பாராளுமன்றக் குழுவின் 118 வது கூட்டத் தொடர் தற்போது தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகின்றது.
இந்தக் குழுவிடம் இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் முறையிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கலந்து கொள்ளவுள்ளார். பாராளுமன்றக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகச் சர்வதேச பாராளுமன்ற குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.