மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடலில் மூழ்கி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடலில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவரே காணாமல்போயுள்ளார்.
இந்த நால்வரும் குளித்துக்கொண்டிருந்தபோது இவரை அலை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
ஓந்தாச்சிமடம் வைத்தியர் வீதியைச் சேர்ந்த நகைத் தொழில் செய்யும் குமாரசாமி ரமேஷ் (வயது 19) என்பவரே காணாமல்போயுள்ளார்.
இவரைத் தேடும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.