சிகிரிய பொலிஸ் பிரிவின் கிம்பிஸ்ஸ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டினுள் ஏறி நின்ற சந்தேகநபரொருவர் சற்று நேரத்தில் அவ்விடத்தில் விழுந்து உயிரிழந்தார்.
நீதிமன்றக் கருமங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கசிப்பு விற்பனை தொடர்பான வழக்கின் சந்தேகநபரது பெயர் கூறி அழைக்கப்பட்டபோது கூண்டில் ஏறி நின்றவர் கை, கால்கள் உதறல் எடுத்த நிலையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின் பின் உயிரிழந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்புள்ள மற்றும் சிகிரியா பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.