Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* இராணுவத் தளபதி கூறுகிறார்

ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு காணப்போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தின. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் முன்னரை விட உறுதியாகப் போரை முன்னெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தற்போது மன்னார், மணலாறு முனைகளில் படிப்படியான முன்னேற்றத்துடன் எதிரிகளை அழித்து வரும் எமது படைகள் யாழ்.முன்னரங்கில், ஈழப்போர் இதுவரை சந்திக்காத படையெடுப்பொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார்.

இப்போர் முனை மன்னார், மணலாறு யுத்த முனைகளைப் போல் படிப்படியானதாக இல்லாமல் பாரிய சடுதியான பிரமாண்டமானதாக இருக்கும். யாழ்.முனையில் சில மாதங்களுக்கு முன்னர் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள விருந்தோம். ஆனால் புலிகள் அதை எதிர்பார்த்திருந்ததால் நாம் மன்னார், மணலாறு களமுனைகளைத் திறந்து புலிகளை சண்டைக்கிழுத்து அழித்து வருகின்றோம்.

இப்போது யாழ்.முனையைத் திறப்பதற்கான காலம் வந்துவிட்டது. சரியான நேரம் இன்னும் குறிக்கப்படவில்லை. ஆனால் யாழ். யுத்தமுனையை திறப்பது உறுதி. தனியாக ஒரு முனையில் மட்டுமல்லாமல் கிளாலி முதல் நாகர்கோவில் வரை பரந்து தாக்கப்படும். புலிகளால் மூன்று முனைகளிலும் தாக்குபிடிக்க முடியாமல் திணறுவார்களெனத் திட்டம் போட்டுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது தளபதிகளும்.

2006 அக்டோபர் பிழையான நேரத்தில் ஆனையிறவு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட முயற்சி படுதோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டார் இராணுவத் தளபதி. 2006 இல் புலிகள் மாவிலாற்றில் சாட்டுக்குத் தாக்கிக் கொண்டு யாழில் திடீரெனத் தாக்குதல் தொடுத்ததால் ஆரம்பத்தில் சிறிது பின்வாங்க வேண்டி வந்தது. பின்னர் மேலதிகமாகப் புலிகளின் பகுதியில் 400 மீற்றர் தூரம் வரை கைப்பற்றியுள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கூறியுள்ளார்.

55ஆவது,53ஆவது படையணி குறுகிய காலமாக சிறுசிறு தாக்குதல்கள் மூலம் எதிரியின் பகுதிகளில் தினமும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இப்படைப் பிரிவுகளும் கவசப் படைப்பிரிவும் யாழ். யுத்த முனையில் திறக்கப்படவுள்ள படை நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவார்கள்.

யாழ் குடாநாடு எப்போதும் எங்களது முதல் கரிசனைக்குட்பட்ட பிரதேசம். தாக்குதல் டிவிசன்களான 55 வது டிவிசன் 53 ஆவது டிவிசனைத்தவிர 51 ஆவது டிவிசன் வலிகாமத்திலும் 53 ஆவது டிவிசன் வறணியிலுமாக 33 000 படையினரும் பொலிஸ் விமானப் படை, கடல் படையென 8000 படையினருமாக 41,000படையினரது கட்டுப்பாட்டில் யாழ். குடா உள்ளது.

தங்களது கவசப் படையணி துரித வேகத்தில் ஆனையிறவை சென்றடைய முடியுமென்றும் பல திட்டங்கள் இராணுவத்தினரால் போடப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டத் தளபதி தெரிவுத்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com