Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* சபாநாயகருக்கு கடிதம்

எம்.ஏ.எம்.நிலாம்

கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாத இறுதி வாக்கெடுப்பின்போது அமைச்சரொருவரால் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டது தொடர்பாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

2007 டிசம்பர் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கருகில் மலர் வளையமொன்று வைக்கப்பட்ட விடயம் தங்களுக்கு நினைவிருக்குமென எண்ணுகின்றேன்.

சம்பவம் இடம்பெற்ற அன்றே விடயம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படுமென நீங்கள் சபைக்கு அறியத்தந்தீர்கள். இது ஹான்சார்ட்டிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் தங்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்தவிதமான அறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

நாம் இது தொடர்பில் தங்களிடம் கேட்டபோது இந்த மலர் வளையம் பாராளுமன்றத்துக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இது எவ்வாறு இடம்பெற்றது. இச் சம்பத்துக்கு பாராளுமன்ற ஊழியர்களில் எவராவது தொடர்பு பட்டுள்ளாரா? பாராளுமன்றப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டதா?

சம்பவம் தொடர்பில் படைக்கல சேவிதரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதா? என்பன போன்ற தகவல்களை நாம் அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.

பாராளுமன்றத்துக்குள் மலர்வளையம் வைக்கப்பட்டபின்னர் இதுவரை அமைச்சர்கள் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை உன்னதமான பாராளுமன்றத்திற்குள் மலர் வளையம் சாத்தப்பட்டதன் சாபம் என மக்கள் கருதுகின்றனர்.

எனவே, சம்பவம் தொடர்பில் தாங்கள் எடுத்த நடவடிக்கை என்னவென்பது குறித்து அடுத்துவரும் பாராளுமன்ற அமர்வின்போது சபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com