கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு புதுவருடத்துக்கு நண்பர்களுடன் வந்த முகமட் நுவைஸிர் என்ற 18 வயது இளைஞன் மாணிக்க கங்கையில் குளித்தபோது நீரில் மூழ்கி மரணமான சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
வெலிகமயைச் சேர்ந்த இவர் நண்பர்களுடன் ஆற்றில் குளித்ததாகவும் அப்போது அவர் நீரில் மூழ்கித்தத்தளித்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் எவரையும் குளிக்க வேண்டாம் எனவும் கதிர்காமம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதனையும் மீறி இவர் குளித்ததாகவும் மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை இவரது ஜனாஸா அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.