வடபகுதி போர்முனையில் உயிரிழந்த மூவரது சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இந்தச் சடலங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
வவுனியா, மன்னார் பகுதிகளில் மோதலில் மரணமான இரு விடுதலைப்புலிகளுடைய சடலங்களையும் மரண விசாரணையின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று வன்னிக்கு எடுத்துச் சென்று கையளித்தது.
அதேநேரம், மணலாறு பிரதேசத்தில் நடைபெற்ற சண்டையில் புலிகளினால் கைப்பற்றப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் பொறுப்பேற்று ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் கையளித்துள்ளது.