ஈரானிய ஜனாதிபதி அஹ்மதி நிஜாத் இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன `தினக்குரல்'க்கு இதனை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஈரானிய ஜனாதிபதி இலங்கைக்கு 2 நாட்கள் விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை வரும் அவர் 29 ஆம் திகதியும் இங்கு தங்கி நிற்பார் என்றார்.
ஈரானுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது முக்கிய சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டிருந்தன. ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திலும் எரிசக்தி மற்றும் எரிபொருள் உள்ளிட்ட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவிருப்பதாக அறியவருகிறது.