முல்லைத்தீவு பனிக்கன் குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கொக்காவிலுக்கு தெற்கே விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு நிலையம் மீதே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இந்த நிலையம் மீது கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் இது மீண்டும் செயற்பட்டு வந்ததாகவும் இதையடுத்தே நேற்று நண்பகல் இந்த நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு அது அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றைய இந்தத் தாக்குதலில் இலக்கு அழிக்கப்பட்டதாக விமானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் விங் கொமாண்டர் தெரிவித்தார்.